Friday, March 16, 2012

அருமையான அம்மாவும்.......... அருமையான மனைவியும் ...

அருமையான அம்மாவும்.......... அருமையான மனைவியும் ...

அம்மா காலையிலேயே என் மனைவியிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள்..... எனக்கு என்னமோ இன்னிக்கு முடியவே இல்லம்மா ....குக்கர் நீ வைத்துவிடம்மா ....முடிந்தால் நான் அப்புறமாக ஒரு பொரியலும் ரசமும் பண்ணிவிடுகிறேன் என்று ...

அம்மா சமையல் நன்றாக இருக்கும்.... பசங்களும்.........ஐயா .... பாட்டி சமையல் ...நன்றா இருக்கும் என்று ஜொள்ளு விடுவார்கள்... என் மனைவி சமையலும் நன்றாக இருக்கும் ...... இருந்தாலும் அம்மாவின் கை வண்ணம் கொஞ்சம் டேஸ்ட் ஜாஸ்தி ...

அம்மாவுக்கு எண்பது வயது .... இருந்தாலும் அவள் வேலையை அவள் பார்த்துக்கொண்டு முடிந்தமட்டும் சமையலும் பண்ணிக்கொண்டு .... ஏதோ கடவுள் புண்ணியத்தில் வீட்டிற்குள் நடமாடி கொண்டிருப்பாள். வீட்டுக்கு வெளியில் வந்து கம்பௌண்டுக்கு உள்ளேயே
ரு பத்து நிமிஷம் காலையிலும் மாலையிலும் வாக்கிங் போவாள் ....தன்னால் முடிந்த உதவியை வீட்டில் செய்துகொண்டிருப்பாள் .... எல்லாவிதமான சாப்பாட்டு பொடிகளும் பண்ணி வைத்துவிடுவாள்.. அம்மா முடியவில்லை என்று சொன்னது என் காதிலும் கேட்டது. ஆனால் நான் ன்றும் கேட்டுக்கொள்ளவில்லை(கேட்டால் என் அருமை மனைவிக்கு கொஞ்சம் - மறுபடியும் சொல்லுகிறேன் கொஞ்சம்தான் - பிடிக்காது என்பது வேறு விஷயம் )..... நான் கலையில் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்ததால் ன்றும் கேட்கவில்லை .. மதியம் என் மனைவியிடமிருந்து போன் ..... நான் என்மனதில் என்னடாது .... அம்மாவுக்கு ஏதோ என்று போன் ஆன் செய்தேன் ..... ஏங்க ....நாளைக்கு வெள்ளிகிழமை இல்லையா ...வரும்போது பூஜை சாமான் வாங்கிட்டு வந்துடுங்க ...... என்றாள்... நான் சரி என்று சொல்லிவிட்டு .... அம்மா சாதாரணமாக இருக்கிறாளா என்று கேட்பதற்குள் அந்த பக்கத்தில் போன் கட்…………….நானும்….. ஏதாவது என்றால் இவள் சொல்லியிருப்பாளே என்று என் மனதை சமாதான படுத்திக்கொண்டேன் ... மாலை/இரவு கிளம்பும்போது வங்கியில் எட்டு மணி வரை லேட் ஆகிவிட்டது ..... நல்ல பசி வேறு... வீட்டுக்கு சென்ற உடனே சாப்பிடவேண்டும் என்று நினைத்துகொண்டே வீட்டுக்கு போகும்போது மறக்காமல் பூஜை சாமான் வாங்கிகொண்டு போனேன் ... (மறந்தால் என்ன ஆகும் என்று திருமணம் ஆனவர்களுக்கு தெரியுமே... ! ! ! ) அம்மாதான் கதவை திறந்தாள் ......எப்படி இருக்கேம்மா .... இப்போ பரவாயில்லையா .... என்று கேட்டுகொண்டே உள்ளே வந்தேன் ………….. இந்த வலது கைதான்டா வலித்துக்கொண்டே இருக்கிறது .... ண்ணும் தூக்கமுடியவில்லை... என்று அம்மா சொன்னதை காதில் வாங்கிக்கொண்டு டிரஸ் மாற்றிக்க சென்றேன் மனைவி பசங்களுக்கு ஹோம் ர்க் சொல்லி கொடுப்பதில் மும்முரமாக இருந்தாள் கை கால் அலம்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன் .... அம்மாதான் தட்டு வைத்து சாப்பாடு போட்டாள்... நீ உட்கார்ந்து கொள் அம்மா நான் பார்துகொள்ளுகிறேன் என்றேன் ...... இருக்கட்டும்டா ... உனக்கு சாப்பாடு போட்டுவிட்டு நான் படுத்து கொள்ளுகிறேன் என்றாள். நான் சாப்பிட்டு \முடிக்கும் வரை எனக்கு பக்கத்திலேயே உட்கர்ந்திருந்தாள்…. சாப்பிட்டு விட்டு கை கழுவினேன் .... அம்மாவிடம் ஏதாவது மாத்திரை வேணுமா என்று கேட்டேன் .... அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டு படுக்க சென்றுவிட்டாள்... நான் கொஞ்சம் நியூஸ் பார்க்கலாமே என்று டிவி ஆன் பண்ணினேன் .... என் மனைவி பசங்களுக்கு ஹோம் வொர்க் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தாள்... என்னங்க வந்தவுடன் டிவி ஆன் பண்ணிட்டீங்க .... பசங்களுக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு டிவி ஆப் பண்ணிடுங்க. .... அப்படியே எனக்கு ரு தட்டிலே கொஞ்சம் ரைசும் (சாப்பாடு) மோரும் போட்டு கொடுக்கிறீங்களா………. ரொம்ப டயர்டா……….. இருக்கு எனக்கு என்றாள் .... நான் டிவி ஆப் பண்ணி விட்டு அவளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு என் பையன்களிடம் கொஞ்சம் விளையாடி விட்டு .... படுக்க சென்றேன்... ஆண்டவா நாளைய பொழுது நல்ல பொழுதாக விடிய வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணிக்கொண்டு ... முக்கியமான ன்


------------------------------------------------------
WE ARE SHARING WHAT WAS SHARED WITH US!
------------------------------------------------------

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home