கருமிக்கும் விளக்குமாற்றுக்கும் பேதமி
http://www.brahminsnet.com/forums/showthread.php/1677
Niti-200 கருமிக்கும் விளக்குமாற்றுக்கும் பேதமில்லை
धान्यानि कीर्णानि यथाप्रुथिव्यांसं मार्जती संचिनुते वृधैव |
मूढस्य थासं चिनुते धनानि धाताच भोक्ताच परोस्ति तस्य ||
தான்யாநி கீர்ணானி யதா ப்ருத்வ்யாம்ஸம் மார்ஜதீ ஸம்சிநுதே வ்ருதைவ |
மூடஸ்ததா ஸம்சிநுதே தனானி தாதா ச போக்தா ச பரோஸ்தி தஸ்ய ||
பொருள் :
நிலத்தில் சிந்தியிருக்கும் தான்யங்களை ஓரிடத்தில் குவித்து வைக்கப் பயன்படும் விளக்குமாற்றுக்கு
அந்த தான்யங்களால் பயனேதும் இல்லை, தான்யங்களை உண்ணப்போவது யாரோ!
அதுபோல், கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் என்று முடிந்த வகையில் எல்லாம்
கஞ்சத்தனம் செய்து பணத்தை சேமித்து வைக்கும் மூடனான கருமிக்கும் அந்த தனத்தால் பயன் ஏதுமில்லை,
அவன் பணத்தை வேறெவனோ அனுபவிக்கப்போகிறான். எனவே கருமிக்கும் விளக்குமாற்றுக்கும் பேதமில்லை.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home