Monday, January 13, 2014

Tharpanam on 14th Jan 2014

தை மாத தர்ப்பண/பொங்கல் பானை வைக்கவேண்டிய.

This thread is located at http://www.brahminsnet.com/forums/showthread.php/6484-தை-மாத-தர்ப்பண-பொங்கல்-பானை-வைக்கவேண்டிய

Here is the message that has just been posted:
***************
ஶ்ரீ: அவர்கள் கூறுவது சாஸ்த்திரம் அடியேன் கூறுவது யதார்த்தம் சாஸ்த்ரம் பிறருக்குக் கூறுவது யதார்த்தம் நாம் அநுஷ்டிப்பது.  சிறு பிள்ளைகளானாலும் 4 முறை ஸேவிக்கவேண்டும் என ஸம்ப்ரதாயம் இருக்கிறதென தெரிந்தும் பெரியோர்களாகிய நாம் 2தரம் ஸேவி போறும் என்கிறோம். இதனால் அவர்களை ஸம்ப்ரதாயத்தை மீறும்படி ஊக்குவிக்கிறோம் என்பது பொருள் அல்ல, அவர்கள் மீது உள்ள ஒரு தயையினால் அவ்வாறு சொல்கிறோம்.  வயதானவர்கள், நோயாளிகள் போன்றவர்கள் மன உறுத்தலுடன் அநுஷ்டிக்க வேண்டாம் என்பதற்காக, அதற்கான பாபங்கள் யாதாகிலும் அது நம்மை அடையட்டும் என்று, பெருமாள் உத்திரவு பெற்று கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.   அடியேன் கூறுவது சரியென வாதம் செய்ய விரும்பவில்லை, ஆனால் யதார்த்தத்தில் நாம் நிறைய சாஸ்த்ர விஷயங்களை மீறித்தான் செய்கிறோம் என்பதை உணரவேண்டும் என்பதற்காக சில வாதங்களை முன் வைக்கிறேன்.  சாஸ்த்திரம், தர்மம் மிகவும் நுட்பமானவை என்று பெரியோர் கூறுவர் அயன சந்திகளில் உத்தராயணத்தில் பண்ணவேண்டும் எனக் கூறும் சாஸ்திரம்,  க்ரஹண காலங்களில் க்ருஷ்ண பக்ஷங்களில் பண்ணவேண்டும் என இருக்கிறது.  ச்ராத்த திதி மதியம் 2 மணிக்குப் பிறகு வரும் நாட்களில் கூட நாம் ச்ராத்தத்தை 2 மணிக்கு முன்னதாகவே முடித்துவிடுகிறோம்.  ஆடி, தை தவிர மற்ற மாதங்களில் (பலர் தர்பணமே பண்ணுவதில்லை) தர்பணம் செய்ய மாதப் பிறப்பு எப்போது என அறிந்துகொள்ள முற்படுவதேயில்லை.  மேலும் மாதப்பிறப்பு இரவு 8 மணிக்குப் பிறகு என்றால் என்ன செய்வோம்? தர்பணம், ச்ராத்தம் அஸ்தமனத்திற்குப் பின் செய்ய அநுமதியுண்டா?  எனவேதான், முடிந்தவர்கள், சக்தியுள்ளவர்கள் பொறுத்திருந்து செய்யுங்கள் என்றும், சக்தியில்லாதவர்கள் குதபகாலத்தையாவது அநுஷ்டியுங்கள் என்று எழுதியுள்ளேன்.  மேலும், அடியேனுடைய கருத்து பத்தோடு பதினொன்றுதான், யாராவது ஓர் இருவருக்கு அது உதவியாக அமையுமானால் மகிழ்ச்சி! தாஸன், என்.வி.எஸ்
***************

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home