Wednesday, October 03, 2012

Niti-199 சொல்பவரினும் சொல்லப்படுவதே முக்கியம்

http://www.brahminsnet.com/forums/showthread.php/1701-Niti-199-
   Niti-199 சொல்பவரினும் சொல்லப்படுவதே முக்கியம்

    युक्ति युक्तं वचो ग्राह्यं बालादपि शुकादपि |
    अयुक्तमपि नग्राःया साक्षादपि बृहस्पते: ||

    யுக்தி யுக்தம் வசோ க்ராஹ்யம் பாலாதபி |
    அயுக்தமபி நக்ராஹ்ய ஸாக்ஷாதபி ப்ருஹஸ்பதே: ||
    பொருள் :
    ப்ருஹஸ்பதி எனும் குரு பகவானே (அல்லது ஆசார்யனே) கூறினாலும் ஏற்கத் தகாததை ஏற்காமையும்,
    சிறுவனோ, கிளியோ சொன்னாலும் ஏற்கத் தக்கதாயின் ஏற்றுப் போற்றுதலும் அறிவுடைமை ஆகும்.

    திருவள்ளுவர் வாக்கு:

    குறள் 423:
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
    மு.வ உரை:
    எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

    Translation:
    Though things diverse from divers sages' lips we learn,
    'Tis wisdom's part in each the true thing to discern.
    Explanation:
    To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home